கோலாலம்பூர்:நவ 3 அடுத்த தவணையிலும் ஒற்றுமை அரசாங்கத்தின் ஆட்சி தொடரும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
2022 பொதுத் தேர்தலுக்குப் பிறகு 18 அரசியல் கட்சிகள், பல சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் அமைக்கப்பட்ட ஒற்றுமை அரசாங்கம் இப்போது வலுவாக உள்ளது.
இதனால் தற்போதைய ஆட்சிக் காலம் முழுவதும் மட்டுமின்றி அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பின்னரும் கூட்டாட்சி மட்டத்தில் ஒத்துழைப்பு தொடரும் என நான் எதிர்பார்க்கிறேன்.
தற்போது நிலைமை அமைதியாக உள்ளது. அரசியல் ரீதியாக நிலையானதாக உள்ளது.
இந்தக் கூட்டணி இணைந்து செயல்படுவதாக நான் நினைக்கிறேன்.
இந்த ஆட்சிக் காலத்திற்குப் பிறகும் இணைந்து செயல்படும் என்று நான் நம்புகிறேன் என்று பிரதமர் கூறினார்.
பெர்னாமா