துபாய்: நவ 3- இஸ்ரேல், அமெரிக்காவுக்கு அழிவுகரமான மிகக் கடும் பதிலடி தரப்படும்’ என ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி மிரட்டல் விடுத்திருப்பதால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.
கடந்த மாதம் 1ஆம் தேதி இஸ்ரேல் மீது 200 ஏவுகணைகளை ஏவி ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இதற்கு பதிலடியாக இஸ்ரேல், கடந்த 26ஆம் தேதி ஈரானின் தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட பகுதியில் உள்ள 20 ராணுவ நிலைகளை குறிவைத்து குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில், ஈரானில் அனைத்து அதிகாரங்களும் படைத்த உச்ச தலைவர் அயதுல்லா கமேனி (85) பேசிய வீடியோ ஒன்று அந்நாட்டு அரசின் டிவி சேனலில் வெளியிடப்பட்டது.
அதில் கமேனி, ‘‘நமது எதிரிகள், அது இஸ்ரேலாகட்டும், அமெரிக்காவாக இருக்கட்டும், ஈரான் மக்களுக்கும், இந்த தேசத்திற்கும், ராணுவத்திற்கும் எதை அவர்கள் கொடுத்தார்களோ, அதே போன்ற மிகக்கடுமையான அழிவுகரமான தாக்குதலை நிச்சயம் பெறுவார்கள்’’ என்றார்.