திருவனந்தபுரம்: நவ 3-
சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு திட்டத்தை கேரள அரசு அறிவித்துள்ளது.
அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்கு பின் கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
தரிசனத்துக்காக வந்த இடத்தில் மரணமடையும் பக்தர்களின் குடும்பத்தினருக்கு தேவசம்போர்டில் இருந்து ரூ.5 லட்சம் வரை கிடைக்கும்.
பக்தர்களின் வசதிக்காக 14,000 போலீசார் மற்றும் தன்னார்வலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கான வாகன நிறுத்துமிடத்தை 10,000 இடங்களாக அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆன்லைனில் முன்பதிவு செய்யாதவர்களுக்கு தரிசனத்துக்காக தினமும் 10,000 டிக்கெட்டுகள் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும்.
சபரிமலை கோயில் மண்டல பூஜைக்காக நவ.16-இல் திறக்கப்பட்டு டிசம்பர் கடைசி வாரம் வரை திறந்திருக்கும் என்றும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.