![](https://thinathanthi.my/wp-content/uploads/2024/11/WhatsApp-Image-2024-11-03-at-14.06-1024x512.jpg)
தஞ்சோங் ரம்புத்தான், நவ.3: இங்குள்ள சிம்மோர் செல்லும் வழியில் அலாம் மெடிக் கிளினிக்கை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார் உலுகிந்தா சட்டமன்ற உறுப்பினர் முகமட் அராபாட் வரிசை. இந்த கிளினிக்கை டாக்டர் எஸ்.துர்கா மற்றும் டாக்டர் எஸ்.
உஷா நந்தினி தலைமையில் சிறப்பாக இயங்க தம் வாழ்த்தினை தெரிவித்துக்கொண்டார்.
இந்த தஞ்சோங் ரம்புத்தான் அலாம் மெடிக் கிளினிக் இரண்டாவது கிளை நிறுவனமாகும். இவர்கள் ஏற்கனவே, முதல் கிளினிக்கை சுங்கை சிப்புட்டில் திறந்து விட்டனர். அந்த கிளினிக்கில் தரமான மருத்துவ சேவைகள் மற்றும் எக்ஸ்ரே வசதிகளும், இதர வசதிகளும் இருப்பதாக தகவல் கிடைக்கப்பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.
அத்தகைய வசதிகள் மற்றும் மிகவும் தரமான மருத்துவ சேவைகள் இங்குள்ள கிளினிக்கில் வழங்க தயாராகவுள்ளனர். ஆகையால், உலுகிந்தா மற்றும் தம்புன் தொகுதி மக்கள் இந்த கிளினிக்கை மருத்துவ சேவைக்கு நாடாலாம் என்று அவர் நம்பிக்கையுடன் கூறினார்.
அரசாங்கத் துறையில் மருத்துவராக பணியாற்றுபவர்கள் தனியார் கிளினிக்கில் தங்களின் வேலை நேரம் முடிந்த பின் பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதே வேளையில் அவர்கள் அரசாங்க மருத்துவத்துறையிலிருந்து வெளியாகி சுயமாக தனியார் கிளினிக்கை திறந்தும் சேவையாற்ற முடியும். இவ்வாறு செய்வதன் வாயிலாக அதிகமான மருத்துவர்கள் அரசாங்கத்துறையில் பணியாற்ற வாய்ப்புகள் அதிகம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் இரு அலாம் மெடிக் கிளை நிறுவன கிளிக்குகள் லெங்கோங் மற்றும் கட்டி வட்டாரத்திலும் மிக விரைவில் திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக டாக்டர் எஸ்.துர்கா மகிழ்ச்சியுடன் கூறினார்.
இந்நிகழ்வில், உலுகிந்தா சட்மன்ற உறுப்பினர் முகமட் அராபாட் வரிசை, டாக்டர் எஸ்.துர்கா மற்றும் டாக்டர் உஷா நந்தினியின் பெற்றோர்கள் முன்னாள் டி.எஸ்.பி. சுப்பிரமணியம் தம்பதியினர், குடும்ப உறவினர்கள், பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து சிறப்பித்தனர்.