கல்லுமலை ஸ்ரீ சுப்பிரமணியர ஆலயத்தில் கந்த சஷ்டி விழா கோலாகலமாக தொடங்கியது!

பேராவில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஆலயமாக விளங்கும் கல்லுமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் தைப்பூச விழாவை அடுத்து மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடப்பபடும் கந்த சஷ்டி விழா இம்மாதம் 3 ஆம. தேதி தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளது.

இவ்விழாவை முன்னிட்டு நேற்று 2-11-24 இல் ஆலயத்தில் கொடியேற்றப்பட்டு இரவு விஷேச பூஜைகள் நடைபெற்றது.

இவ்விழாவில் தொடக்க நாளில் ஆயிரக்காண பக்தர்கள திரண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆலயத்தில் நடைபெறும் தொடர் விஷேச பூஜையில் இம்மாதம் 6. ஆம் தேதி யாகசாலை பூஜை அடுத்த நாள் ( 7-11-24) சூரசம்ஹாரம் நிகழ்வும் , 8-11-24 இல. தெய்வானை திருக்கல்யாணம், அடுத்த நாள 9-11-24 இல் வள்ளி திருக்கல்யாணமும்,10-11-24 இல் திருவூஞ்சல் மற்றும் விடையாற்றி நிகழ்வும் நடைபெற உள்ளது.

இவ்விழாவில் பொது மக்கள் கலந்துக்கொண்டு ஸ்ரீ சுப்பிரமணியர் அருட் பிரசாதம் பெற்றுய்யுமாறு ஆலய நிர்வாகஸ்தினர கள் கேட்டுக்கொள்கின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles