திருமலை,நவ 4-
திருப்பதி தேவஸ்தானத்திற்கு 25 உறுப்பினர்கள் கொண்ட புதிய அறங்காவலர் குழுவை சந்திரபாபு நாயுடு அரசு அறிவித்துள்ளது.
இதில் தெலங்கானாவில் இருந்து 5 பேரும் தமிழகத்தில் இருந்து இருவரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஒவ்வொரு முறையும் புதிய அறங்காவலர் குழு அறிவிக்கும் போதெல்லாம் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆந்திர முதல்வருக்கு சிபாரிசுகள் வருவது வழக்கம். இதன் அடிப்படையில் இம்முறை தெலங்கானாவை சேர்ந்த 5 பேருக்கு சந்திரபாபு வாய்ப்பு அளித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் இருந்து 3 பேருக்கும் தமிழகத்தில் இருந்து திருப்பூரை சேர்ந்த தொழிலதிபர் ராமமூர்த்தி, சென்னையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது
மேலும், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து தலா ஒருவர் என மொத்தம் 25 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.