இன்று முதல் சனிக்கிழமை வரை 50 விழுக்காடு அபராதக் கழிவு – கோலாலம்பூர் காவல் துறை வழங்குகிறது

கோலாலம்பூர், நவ. 5 –
கோலாலம்பூர் போலீசார் இன்று தொடங்கி எதிர்வரும்
சனிக்கிழமை வரை போக்குவரத்து குற்றங்களுக்கான அபராதத்
தொகையில் 50 விழுக்காடு வரை கழிவு வழங்குகின்றனர்.

இந்நோக்கத்திற்காக தலைநகர் ஜாலான் துன் எச்.எஸ். லீ போலீஸ்
நிலையத்தில் முகப்பிடம் திறக்கப்படும் என்று கோலாலம்பூர்
போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறையின் தலைவர் ஏசிபி
முகமது ஜம்ஸூரி முகமது ஈசா கூறினார்.

வாகனமோட்டிகள் தங்களின் குற்றப்பதிவுகளைச் சரிபார்த்து அபராதத்
தொகையை உடனடியாக ரொக்கமாக செலுத்தலாம் என்று அவர்
சொன்னார்.

எனினும், இந்த அபராதக் கழிவுத் திட்டத்தில் விபத்துகளுக்கான
சம்மன்கள், நீதிமன்ற வழக்கு தொடர்புடைய சம்மன்கள், அபராதம் விதிக்க
முடியாத குற்றங்கள், ஆபத்தான முறையில் வாகனங்களை முந்திச்
சென்றது, அவசரத் தடத்தைப் பயன்டுத்தியது, சிவப்பு சமிக்ஞை விளக்கை
மீறிச் சென்றது உள்ளிட்ட குற்றங்கள் உள்ளடங்காது என்றும் அவர்
தெளிவுபடுத்தினார்.

கனரக வாகனங்கள், வாகன புகைப் போக்கியை மாற்றியமைத்தது, ஓப்
செலாமாட் இயக்கத்தின் போது வழங்கப்பட்ட சம்மன்கள், இரட்டைக்
கோடுகளில் முந்திச் சென்றது, ஆகிய குற்றங்களுக்கும் அபராதக் கழிவு
வழங்கப்படாது என்றார் அவர்.

பெர்னாமா

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles