கோல லங்காட், நவ. 5 –
பொது மக்கள் மத்தியில் பெரும் அச்சம் எழும் அளவுக்கு அம்பாங், கோல சிலாங்கூர் மற்றும் சுங்கை பூலோவில் அந்நிய நாட்டினரின் எண்ணிக்கை பெருகி வருவது தொடர்பில் சிலாங்கூர் மாநில போலீசார் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட மூன்று இடங்களோடு மாநிலத்தின் இதர மாவட்டங்களிலும் அந்நிய நாட்டினரின் குடியேற்றம் கட்டுப்பாட்டில் உள்ளதை உறுதி செய்யவும் பொது அமைதிக்கு உத்தரவாதம் அளிக்கவும் தாங்கள் மலேசிய குடிநுழைவுத் துறையிடன் இணைந்து செயல்பட்டு வருவதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் கூறினார்.
சந்தேகத்திற்குரிய அந்நிய நாட்டினர் அதிக எண்ணிக்கையில் இருக்கும் இடங்களில் சோதனை மேற்கொள்வதற்கான நடவடிக்கையில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.
இவ்விவாகரத்தில் நாங்கள் குடிநுழைவுத் துறையிடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். சம்பந்தப்பட்ட இடங்களில சில அதிரடிச் சோதனைகள் நடத்தப்படும் என்றார் அவர்.