மா பவளச்செல்வன்
செத்தியாவங்சா, நவ 5-
உணவக உரிமையாளர்களுக்கு எதிராக சுமைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது பெரும் சுமையை ஏற்படுத்துகிறது.
இதனால் உணவு விலைகள் உயரும் அபாயம் ஏற்படலாம் என்று
பிரெஸ்மா எனப்படும் மலேசிய இந்திய முஸ்லிம் உணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் டத்தோ ஹாஜி ஜவஹர் அலி கூறினார்.
நாங்கள் ஏற்கெனவே அந்நிய தொழிலாளர்களின் மாற்று முறை பிரச்சனையை எதிர்நோக்கி வருகிறோம்.
இதற்கே இன்னும் தீர்வு கிடைக்கப்பட வில்லை.
மேலும் அந்நிய தொழிலாளர்களுக்கு சொக்சோ செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அந்நியத் தொழிலாளர்களுக்கு இ.பி.எஃப், பல முறை நுழையும் விசா புதிய லெவி கட்டண முறை ஆகியவை அமலுக்கு கொண்டு வரப்படவுள்ளது.
இது எங்களின் சுமைகள் தொடர்ந்து அதிகரிக்கிறது.
மேலும் அடிப்படை சம்பளத்தையும் 1,700 ரிங்கிட்டுக்கு உயர்த்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவை அனைத்தும் நல்ல திட்டங்கள்தான். ஆனால் இது இப்போதைய சூழ்நிலைக்கு பொருந்தாது என்று அவர் சொன்னார்.
ஆகையால், இத் திட்டங்களை அமல்படுத்துவதை அரசாங்கம் ஒத்திவைக்க வேண்டும் என அவர் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டார்.
அப்படியே இதனை அமல்படுத்தினால் அது உணவக உரிமையாளர்களுக்குத்தான் பெரிய பாதிப்பை கொண்டு வரும்.
இந்த சுமையை எல்லாம் அவர்கள் உணவு பொருட்களின் விலைகளில் தான் இறக்கி வைப்பார்கள்.
ஆகவே இந்த விவகாரங்களை அரசாங்கம் உரிய கலந்தாய்வுக்கு பின் முடிவுகளை எடுக்க வேண்டும் என்று டத்தோ ஜவஹர் அலி கேட்டுக் கொண்டார்.