செமினி, நவ.5-
செமினி தோட்ட தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க பெனால்டி கிண்ண கால்பந்து போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்போட்டி வரும் 9ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 8.00 தொடங்கி மாலை 5.00 மணி வரை செமினி தோட்ட தமிழ்ப்பள்ளியின் திடலில் நடைபெறவுள்ளது என்று பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவேர் சரண்பாபு தெரிவித்தார்.
இப்போட்டி நடத்தப்படுவதன் முக்கிய நோக்கம் பள்ளியின் வளர்ச்சிக்காக நிதி திரட்டுவதாகும். இதை இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
இதில் முதலாவதாக வெற்றி பெறும் குழுவிற்கு வெ.3,000 ரொக்கம், கிண்ணம், பதக்கம் ஆகியவை வழங்கப்படும். 2ஆவதாக வெற்றி பெறும் குழுவிற்கு வெ.1,000 ரொக்கம், கிண்ணம், பதக்கம் ஆகியவை வழங்கப்படும். 3ஆவதாக வெற்றி பெறும் குழுவிற்கு வெ.500 ரொக்கம், பதக்கம் ஆகியவை வழங்கப்படும். 4ஆவதாக வெற்றி பெறும் குழுவிற்கு வெ.500 ரொக்கம், பதக்கம் ஆகியவை வழங்கப்படும்.
இதற்கு வெ.150 கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்துவதற்கான இறுதி நாள் வரும் 7ஆம் தேதி (வியாழக்கிழமை) ஆகும். நிதியை அதிகரிக்கும் நோக்கத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்போட்டிக்கு பொதுமக்களிடமிருந்து ஆதரவு கிடைக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகையால், இதுகுறித்த மேல் விவரங்களைத் தெரிந்து கொள்ள விரும்புவோர் ரூகன் (016-3387674), ஜீவா (016-4145184) ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம் என்று சரண்பாபு குறிப்பிட்டார்.