2026 சட்டமன்றத் தேர்தலிலும் திமுகவே வெல்லும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

கோவை: நவ 6- தமிழ்நாடு அரசின் திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடைகிறதா என மாவட்ட வாரியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்

இதன்படி முதல்கட்டமாக நேற்று கோவையில் தொடங்கினார். இதையடுத்து கெம்பட்டி காலனியில் பொற்கொல்லர்களின் நகை பட்டறைக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்.

பொற்கொல்லர்களிடம் நேரில் கலந்துரையாடி குறைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

பின்னர் கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள் உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.

அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணிகளைச் செய்ய வேண்டும்” என கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

பின்னர் கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் முதல்வர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் “2026 சட்டமன்றத் தேர்தலிலும் திமுகவே வெல்லும்.

2026 சட்டமன்றத் தேர்தலிலும் திமுகவே வெல்லும் என்பதை மக்களின் வரவேற்பில் இருந்து தெரிந்து கொண்டேன்.

தங்க நகை தொழில் பூங்கா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும்.

கோவை மக்கள் பல கோரிக்கைகளை வைத்துள்ளனர், அது நிறைவேற்றித் தரப்படும்” என முதலமைச்சர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles