வாஷிங்டன்: நவ 6- அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு முடிவடைந்த நிலையில், ஓட்டு எண்ணிக்கை நடந்து வருகிறது.
இதில், டொனால்டு டிரம்ப், 232 இடங்களில் வெற்றி பெற்று முன்னிலை வகித்து வருகிறார். கமலா ஹாரிஸ் 198 இடங்களில் வெற்றி பெற்றுள்ளார்.அமெரிக்காவின், 47ஆவது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது.
குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் (வயது78), ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ்(வயது 60), போட்டியிடுகின்றனர்.
ஓட்டு எண்ணிக்கை தற்போது நடந்து வரும் நிலையில், இன்டியானா, கென்டக்கி, அலபாமா, மிஸ்ஸிசிபி, புளோரிடா உள்ளிட்ட மாகாணங்களில், டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.
270 தொகுதிகளில் வெற்றி தேவை. தற்போதைய நிலவரப்படி,டிரம்ப் 232 இடங்களில் வெற்றி பெற்றுள்ளார்.
இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ், வெர்மான்ட், மாசசூசெட்ஸ், ரோட் ஐலண்ட், கனெக்டிகட் உள்ளிட்ட மாகாணங்களி்ல், 198 இடங்களில் மட்டும் வெற்றி பெற்று பின்தங்கி உள்ளார்.தொடர்ந்து ஓட்டு எண்ணிக்கை நடந்து வருகிறது.