“புதிது புதிதாக கட்சி தொடங்குபவர்கள் எல்லாம்..” விஜய்யை மறைமுகமாக விமர்சித்த முதல்-அமைச்சர்

சென்னை, நவ 6- சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட அகரம், ஜெகந்நாதன் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாநகராட்சி பன்னோக்கு மையத்தில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.) சார்பில் முதல்-அமைச்சரின் சட்டசபை உறுப்பினர் மேம்பாட்டு நிதியை கொண்டு “முதல்வர் படைப்பகம்” என்ற பெயரில் கோ-வொர்க்கிங் ஸ்பேஸ் அமைக்கப்பட்டுள்ளது.

இது ரூ.2.85 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இதை இன்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்து உரையாற்றினார்.

தேவையில்லாமல் எல்லோருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை..
அது தேவையும் இல்லை.எங்கள் நேரத்தை வீணடிக்க நாங்கள் விரும்பவில்லை. ‘வாழ்க வசவாளர்கள்’ என அண்ணா கூறியதை நினைவில் வைத்து செயல்படுகிறோம்.

புதிது புதிதாக கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் தி.மு.க. அழிய வேண்டுமென கூறுகிறார்கள். தி.மு.க ஆட்சியின் 4 ஆண்டு சாதனைகளை அவர்கள் ஒரு கணம் எண்ணிப் பார்க்க வேண்டும் என்று அவர் கூறினார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles