ஷா ஆலம், நவ. 7– புக்கிட் காசிங் சட்டமன்றத் தொகுதி நிலையிலான
தீபாவளி பொது உபசரிப்பு வரும் செப்டம்பர் 9ஆம் தேதி சனிக்கிழமை
பெட்டாலிங் ஜெயா, லாமான் எம்.பி.பி.ஜே. வளாகத்தில் நடைபெறும்.
இரவு 7.00 மணி தொடங்கி 9.00 மணி வரை நடைபெறும் இந்த பொது
உபரிப்பில் பல்லினங்களையும் சேர்ந்த சுமார் ஆயிரம் பேர் கலந்து
கொள்வர் என தாங்கள் எதிர்பார்ப்பதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜீவ் தெரிவித்தார்.
இந்த தீபாவளி பொது உபசரிப்பில் விருந்துபசரிப்போடு இந்திய
பாரம்பரியக் கலையான பரதம் உள்ளிட்ட நடனங்களும் ஆடல், பாடல்
நிகழ்வுகளும் இடம் பெறும் என அவர் தெரிவித்தார்.