
கோலாலம்பூர் நவ 7-
தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிபிபி கட்சியின் தீபாவளி பொது உபசரிப்பு வரும் நவம்பர் 9 ஆம் தேதி மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.
கோலாலம்பூர் கம்போங் அத்தாப் பிபிபி கட்சியின் தலைமையகத்தில் காலை 11 மணி முதல் மாலை 3.00 மணிவரை இந்த தீபாவளி விருந்து உபசரிப்பு கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா தலைமையில் நடைபெறுகிறது.
பிபிபி கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள்.
பொதுமக்கள் இந்த தீபாவளி திறந்த இல்ல உச்சரிப்பில் கலந்து கொள்ளும்படி அழைக்கப்படுகிறார்.