
மாலிம் நாவார், நவ 8
வருகின்ற 16 நவம்பர் 2024 மாலிம் நாவார் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு YB பவானி ஷாஷா அவர்களின் தலைமையில் தீபாவளி விருந்துபசரிப்பு மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது. வெற்றிகரமாக 2ஆம் ஆண்டில் மிகவும் விமரிசையாக நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சி தேசிய வகை மாம்பங் டி ஆவான் சீனப் பள்ளியில் மாலை மணி 7க்கு நடைபெற உள்ளது.மேலும் இந்நிகழ்ச்சியை மெருகேற்ற பலவிதமான கலைநிகழ்ச்சிகள் மற்றும் அதிர்ஷ்ட குழுக்கள் இருக்கின்றது.
நமது தேசியப் பள்ளி மாணவர்களின் படைப்புகளும் உள்ளூர் பாடகர்களின் பாடல்களும் என அனைத்தும் இடம்பெற உள்ளது.
பொதுமக்கள் அனைவரும் தங்களின் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை மேலும் சிறப்பிக்க வேண்டும் என்றும் YB பவானி ஷாஷா அழைக்கின்றார்.