
மாஸ்கோ: ‘நவ 9-
உலக வல்லரசு நாடுகள் பட்டியலில் இடம் பெற இந்தியாவுக்கு தகுதி உள்ளது,” என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறியுள்ளார்.
இந்தியாவை சந்தேகத்திற்கு இடமின்றி வல்லரசு நாடுகளின் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
இந்தியாவின் 150 கோடி மக்கள், மற்ற நாடுகளின் பொருளாதாரத்தை விட வேகமாக இருக்கும் வளர்ச்சி, பண்டைய கலாசாரம், வளர்ச்சிக்கான நல்ல வாய்ப்புகள் ஆகியவை காரணமாக இப்பட்டியலில் இடம்பெற இந்தியாவுக்கு தகுதி உள்ளது.
அனைத்து திசைகளில் இருந்தும் இந்தியா உடன் உறவை வளர்த்து வருகிறோம்.
இந்தியா மிகச்சிறந்த நாடு. 150 கோடி மக்கள் தொகையுடன், ஒவ்வொரு ஆண்டும் 1 கோடி மக்கள் அங்கு பிறக்கிறார்கள்.
பொருளாதார வளர்ச்சியில் உலகளவில் இந்தியா முன்னணியில் உள்ளது என்று புடின் பேசினார்.