
ஷா ஆலம், நவ 10-
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற சிலாங்கூர் மாநில ஜசெக தேர்தலில் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு, புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜீவ் மற்றும் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராவ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இன்று ஷா ஆலம் ஐடிசிசி மண்டபத்தில் சிலாங்கூர் மாநில ஜசெக மாநாடு மற்றும் 15 உச்சமன்ற உறுப்பினர்கள் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது.
பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் இயோ பி இன் 1,180 வாக்குகள் பெற்று முதல் இடத்தில் வெற்றி பெற்றார்.
முன்னாள் தெராத்தாய் சட்டமன்ற உறுப்பினர் தியோ வெய் கிங் 1,155 வாக்குகள் பெற்று இரண்டாம் நிலையில் வெற்றி பெற்றார்.
கின்ராரா சட்டமன்ற உறுப்பினர் இங் ஹி ஹான் 1,058 வாக்குகள் பெற்று மூன்றாம் நிலையில் வெற்றி பெற்றார்.
சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு 1,028 வாக்குகள் பெற்று நான்காம் நிலையில் வெற்றி பெற்றார்.
கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராவ் 1,020 வாக்குகள் பெற்று ஐந்தாம் நிலையில் வெற்றி பெற்றார்.
புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜீவ் 800 வாக்குகள் பெற்று 13 ஆவது நிலையிலும் பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் ஷாரிசான் 780 வாக்குகள் பெற்று 14 ஆவது நிலையிலும் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.