கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் மலேசிய ஜோடி சாம்பியன்!

சியோல் நவ 11 – தென் கொரியா பேட்மிண்டன் மாஸ்டர்ஸ் இறுதிப் போட்டியில் தென் கொரியாவினா ஜோடி ஜின் யோங்-கிம் வோன் ஹோ ஜோடியை தோற்கடித்து மலேசிய ஆண்கள் இரட்டையர் வீரர்களான ஏரோன் – வூய் யிக் ஜோடி
இந்த பருவத்தின் முதல் பட்டத்தை வென்றது

இருப்பினும், போட்டியின் முதலிடத்தில் உள்ள ஜோடி சூப்பர் 300 நிலை போட்டிகளை வெல்வதற்கு முன்பு கடுமையாக போராட வேண்டியிருந்தது.

முதல் செட்டை 21-23 என்ற புள்ளி கணக்கில் இழந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது செட்களை 21-19,21-14 என்ற கணக்கில் வென்றது.

உலக ஆறாவது தரவரிசையில் ஆறாவது இடத்தில் இருக்கும் மலேசிய ஜோடி 15,750 அமெரிக்க டாலர் ரொக்கப் பரிசை தட்டிச் சென்றது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles