காளிதாஸ் சுப்ரமணியம்
ரவாங், நவ 11-
உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் மற்றும் கெஅடிலான் கட்சியின் தேசிய துணை செயலாளர் டாக்டர் சத்யா பிரகாஷ் நேற்று ரவாங்கில் உள்ள தமது இல்லத்தில் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பை நடத்தினார்.
செயாலாங் நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம்ஸ் லியோங், முன்னாள் காப்பார் எம்பி அப்துல்லா சானி, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் தம்பூன் நாடாளுமன்ற தொகுதி சிறப்பு அதிகாரி சுரேஸ்குமார், மலேசிய இந்தியர் சிறு தொழில் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் டத்தோ இராமநாதன், டிரா மலேசிய தலைவர் டத்தோ சரவணன், மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன் மற்றும் செயலவை உறுப்பினர்கள், ஊடகவியலாளர், உலு சிலாங்கூர் கவுன்சிலர் புவனேஸ்வரன் பச்சைமுத்து, பக்கத்தான் ஹராப்பான் தொகுதி தலைவர்கள் உட்பட திரளான மக்கள் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தீபாவளி திறந்த இல்ல உச்சரிப்பில் கலந்து கொண்ட அனைவரையும் டாக்டர் சத்யா பிரகாஷ் தலைமையிலான வரவேற்பு குழுவினர் அன்போடு வரவேற்று உபசரித்தனர்.
அனைவருக்கும் சுவையான உணவும் பரிமாறப்பட்டது என்பதோடு பாரம்பரிய கலை கலாசார நடனங்களும் அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது.
தமது தீபாவளி திறந்த இல்ல உச்சரிப்பில் அனைத்து இன மக்களும் பெரும் அளவில் கலந்து கொண்டது பெரும் உற்சாகத்தை தருகிறது என்று டாக்டர் சத்யா பிரகாஷ் தெரிவித்தார்.