கோலாலம்பூர்: நவ11-
எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் வழக்கில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் சிறைத்தண்டனையையும் அபராதத்தையும் குறைப்பதற்கான மன்னிப்பு வாரியத்தின் முடிவை எதிர்த்து வழக்கறிஞர் மன்றம் தாக்கல் செய்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது
டத்தோஸ்ரீ நஜிப் அப்துல் ரசாக்கின் தண்டனையை குறைப்பதற்கான யாங் டி-பெர்துவான் அகோங்கின் அரசியலமைப்பு சிறப்புரிமையை நீதிமன்றத்தில் கேள்விக்குள்ளாக்க முடியாது என்று கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி அமாட் கமால் ஷாஹித் தமது தீர்ப்பில் அறிவித்தார்.
விண்ணப்பத்தில் எழுப்பப்பட்டுள்ள விஷயத்தை சட்டக் கோட்பாடுகள் அல்லது நீதிமன்றங்கள் மூலம் முடிவு செய்ய முடியாது என்று நீதிபதி அமாட் கமால் ஷாஹித் கூறினார்.
கூட்டரசு மன்னிப்பு வாரியத்தின் ஆலோசனை மாமன்னர் மன்னிப்பு வழங்குவதற்கான செயல்முறையின் ஒரு பகுதியாக நீதிமன்றம் கருதுகின்றது.எனவே, இந்த நீதிமன்றத்தின் முன் மறுபரிசீலனை செய்யப்படுவது பொருத்தமான வழக்கு அல்ல என்று அவர் கூறினார்.
கூட்டரசு நீதிமன்றத்தின் 42-ஆவது பிரிவின்படி மன்னிப்பு வழங்குவது மாமன்னரின் தனிப்பட்ட விருப்பத்தின் நேரடியான செயல்பாடாகும்.
இது கூட்டரசு மன்றம் மற்றும் மன்னிப்பு வாரியத்திற்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் செயல்பாட்டிற்கு உட்பட்டது அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.
பெர்னாமா