சுங்கைபட்டாணி நவ 12- 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்திய சமுதாயத்திற்கு 130 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கியிருப்பதாக மக்களவையில் கடந்த வாரம் தாக்கல் செய்தார்.
இந்திய சமுதாயத்திற்கு ஒதுக்கப்பட்ட 130 மில்லியன் ரிங்கிட் இந்திய சமுதாயத்திற்கு போதுமானதாக இல்லை.அதை 500 மில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தப்பட வேண்டும்.பூனைக்கு போடும் ரொட்டித் துண்டாக கொஞ்சம் கொஞ்சமாக பிச்சிப்போடுவதால் இந்திய சமுதாயம் இதில் எந்த நலனும் பேறப்போவதில்லை என இங்குள்ள அங்கள் கார்டனைச் சேர்ந்த சேர்ந்த உறுப்பினர்கள் நேற்று நடந்து முடிந்த தீபாவளி கொண்டாட நிகழ்வில் தங்கள் கோரிக்கையினை முன் வைத்தனர்.
முன்னால் பிரதமர்டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் ஏற்கனவே அவர் இந்தியர் சமுதாயத்திற்கு ஒதுக்கிய பட்ஜெட்டில் கால் பகுதியையினை கூட தாண்டவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.
சுங்கைபட்டாணி வட்டாரத்தில் ஓய்வு பெற்ற மற்றும் அன்பும் அரவணைப்பும் கொண்ட அமைப்பாக இந்த அங்கள் கார்டன் திகழ்கிறது.கடந்த ஒராண்டுக்கு மேலாக ஒற்றுமையுடன் திகழும் இந்த அமைப்பிற்கு தனபாலன் கணபதி தலைவராக இருந்து வழி நடத்துகிறார்.
மஇகாவின் தேசிய பொதுச் செயலாளர் டத்தோ டாக்டர் எஸ்.ஆனந்தன் தீபாவளி கொண்டாட்ட நிகழ்வில் கலந்து அனைவரிடமும் தனது அன்பினை பகிர்ந்துக் கொண்டதோடு மூத்த உறுப்பினர் செல்லையாவிற்கு சிறப்பு செய்தார்.
சுங்கைபட்டாணி ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான தலைவர் பெ.இராஜேந்திரன்,மஇகா கெடா மாநில துணைச் செயலாளர் வி.மாணிக்கவாசகம் மற்றும் பிரமுகர்களும் கலந்துக்கொண்டனர்.
படம் விளக்கம்
1)தங்கள் கோரிக்கையினை முன் வைத்த அங்கள் கார்டன் உறுப்பினர்கள்.
2)சிறப்பிக்கபட்டவர்களுடன் செல்லையா