சென்னை: நவ 12- பாஜகவுடன் ஒட்டுமில்லை உறவுமில்லை என்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று கட்சி சார்பில் முடிவு எடுத்து அறிவித்துவிட்டோம். 2026-ல் மட்டுமல்ல எப்போதும் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்தார்.