கோவா, நவ 12-
இந்தியா கோவா குளோபல் வர்த்தக மாநாட்டில் மலேசிய – இந்தியா இடையிலான வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் பல வர்த்தக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
கடந்த வாரம் இறுதியில் கோவா குளோபல் வர்த்தக மாநாடு மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.
கோலாலம்பூர், சிலாங்கூர் இந்திய வர்த்தக தொழிலியல் சபையில் தலைவர் நிவாஸ் ராகவன் தலைமையில் 30க்கும் மேற்பட்ட மலேசிய இந்திய வர்த்தகர்கள் இந்த மாநாட்டில் கலந்து சிறப்பித்தனர்.
இந்த மாநாட்டில் முக்கிய அங்கமாக கோவா வைப்ரன்ட் அறக்கட்டளையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது.
இந்த ஒப்பந்தங்கள் மலேசிய – இந்தியா இடையிலான வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்துகிறது என்று அவர் சொன்னார்.
மேலும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நமது பிராந்தியங்களுக்கு இடையே பரஸ்பர வளர்ச்சி, ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான ஒரு முக்கிய தருணத்தைக் குறிக்கிறது.
இந்த ஒப்பந்தம் வணிக கூட்டாண்மைகளை மேம்படுத்துவதற்கும், சந்தை நுண்ணறிவுகளைப் பரிமாறிக்கொள்வதற்கும் துறைகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் ஒரு நடைமுறை கட்டமைப்பை அமைக்கிறது என்று அவர் சொன்னார்.