கோலாலம்பூர்: நவ 12-
நாட்டில் உள்ள மலேசிய இந்திய முஸ்லிம் உணவகங்களில்
விலைகள் உயர்த்தப்படாது.
இதில் பிரெஸ்மா எனப்படும் மலேசிய இந்திய முஸ்லிம் உணவக உரிமையாளர் சங்கம் உறுதியாக உள்ளது என்று அதன் தலைவர் டத்தோ ஹாஜி ஜவஹர் அலி தெரிவித்தார்.
ஜொகூரில் உள்ள இந்திய முஸ்லிம் உணவகங்களில் உணவுகளின் விலை 5 விழுக்காடு உயர்த்தப்படலாம் என்று ஜொகூர் மாநில இந்திய முஸ்லிம் வர்த்தக சங்கம் கூறியுள்ளது.
இந்த முடிவு குறித்து பல கேள்விகளும் சர்ச்சைகளும் எழுந்துள்ளதால் விளக்கமளிக்க வேண்டிய கடப்பாடு பிரெஸ்மாவுக்கு உண்டு என்று அவர் சொன்னார்.
சம்பந்தப்பட்ட அறிக்கை வேறொரு சங்கத்தின் செயலாளர் வெளியிட்டதாகும். இதற்கும் பிரெஸ்மாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த விவகாரத்தில் பிரெஸ்மா மாறுப்பட்ட கருத்தை கொண்டுள்ளது.
இந்திய முஸ்லிம் உணவகங்களில் உணவுகளின் விலைகள் உயர்த்தும் திட்டம் பிரெஸ்மாவுக்கு தற்போது இல்லை என்று அவர் விளக்கம் அளித்தார்.