கோலாலம்பூர், நவ 12-
சிலர் ங்கள் அரசியல் லாபங்களுக்காக இந்திய சமுதாயத்தை மூலதனமாக பயன்படுத்துகின்றனர் என்று சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் கேசவன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
மக்களவையில் நடைபெற்ற பட்ஜெட் விவாதத்தில் பல விவகாரங்கள் குறித்து பேசினேன்.
இதைத் தொடர்ந்து எனக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த விவகாரத்தில் ஒன்றை தெளிவாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
அதாவது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தாக்கல் செய்த 2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் எந்தவொரு சமூகம் ஓரங்கட்டப்படவில்லை.
குறிப்பாக இந்திய சமூகம் இந்த பட்ஜெட்டில் வாயிலாக பயன் பெறுவார்கள் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.
இந்திய சமுதாயத்திற்கு 130 மில்லியன் ரிங்கிட் மட்டும்தான் என குற்றம் சாட்டுகின்றனர்.
ஆனால் பல்வேறு திட்டங்களின்கீழ் ஒதுக்கப்பட்ட நிதியில் இந்திய சமூகமும் பயன் பெறவுள்ளனர் என்று அவர் சொன்னார்.