அமெரிக்க செயல்திறன் துறையை எலான் மஸ்க், விவேக் ராமசாமி வழிநடத்துவார்கள்! ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

புளோரிடா: நவ 13- தொழிலதிபர்கள் எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோர் அமெரிக்கா செயல்திறன் துறையை தலைமை தாங்கி வழிநடத்துவார் என அமெரிக்க அதிபராக தேர்வாகி உள்ள டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.

“மகத்தான எலான் மஸ்க்கும் அமெரிக்க நாட்டின் மீது பற்று கொண்ட விவேக் ராமசாமியும் கூட்டாக இணைந்து அரசாங்கத்தின் செயல்திறன் துறையை தலைமை தாங்கி வழிநடத்துவார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.

இந்த இரண்டு அமெரிக்கர்களும் இணைந்து எனது ஆட்சி நிர்வாகத்தில் அதிகப்படியான விதிமுறைகளை தளர்த்துவது, தேவையற்ற செலவுகளைக் குறைப்பது, அரசு நிறுவனங்களை மறுகட்டமைப்பது போன்ற பணிகளில் கவனம் செலுத்துவார்கள்.

இது ‘Save America’-வுக்கு மிகவும் அவசியம். இது நிச்சயம் அரசு நீதியை வீணடிப்பவர்களுக்கு அதிர்வலைகளை தரும்.

வரும் ஜூலை 4, 2026 வரை அவர்கள் இந்த பொறுப்பில் தொடர்வார்கள்” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles