அந்நியத் தொழிலாளர்கள் விவகாரம்! டத்தோ அந்தஸ்து கொண்ட வங்காளதேச ஆடவர் கைது

ஷா ஆலம், நவ 13-
இல்லாத திட்டத்திற்கு அந்நியத் தொழிலாளர்கள் விண்ணப்பம் தொடர்பில் டத்தோ அந்தஸ்து கொண்ட வங்காளதேச ஆடவரை எம்ஏசிசி கைது செய்துள்ளது..

ஒரு நிறுவனத்தின் இயக்குநரான அவர் 600 அந்நிய தொழிலாளர்களை உள்ளடக்கிய இரண்டு ஒதுக்கீடு விண்ணப்பங்கள் செய்ததாக புகாரை எதிர் நோக்கி இருக்கிறார்.

இந்த இரண்டு விண்ணப்பங்களுக்கும் சராசரியாக 650,000 வெள்ளி முதல் 450,000 வெள்ளி வரை லெவி கட்டணத்தை உள்ளடக்கியதாகும்.

இன்று ஷாஆலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவருக்கு தடுப்பு காவல் கோரி எம்ஏசிசி விண்ணப்பம் செய்தது.

இதனைத் தொடர்ந்து வரும் நவம்பர் 17ஆம் தேதி வரை ஆறு நாட்களுக்கு அவரை தடுப்பு காவலில் வைக்க நீதிபதி முகமத் ரெட்ஸா அனுமதி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெர்னாமா

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles