
கோலாலம்பூர், நவ.14-
பாலர் பள்ளி ஆசிரியர் நிர்மலா துரைசாமி, கல்வி துறையில் 19 ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகிறார். 2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த பாலர் பள்ளி ஆசிரியர் விருதை அவர் தற்போது பெற்றுள்ளார்.
ஆசியக் கல்வி விருதில் (Asia Education Conclave – AEC) சிறப்பம்சமாக திகழ்ந்தார். இந்தப் பிரத்தியேக விருது, பாலர் பள்ளி கல்வி துறையில் அவர் செலுத்தும் உழைப்பையும் கடமை உணர்வையும் போற்றுகிறது.
பகாங் மாநிலத்தின் லூரா பீலூட் தமிழ்ப்பள்ளியில் பணியாற்றும் 43 வயதுடைய நிர்மலா, தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெற்ற விழாவில் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். அவர், “ஆசிய கல்வி மாநாட்டின் சிறந்த பாலர் பள்ளி ஆசிரியர் விருதைப் பெற்று பெருமை சேர்த்துள்ளார்.
இவ்வரங்கம் உலகெங்கிலும் உள்ள ஆசிரியர்களை ஒன்றிணைத்து, எதிர்காலத்தை வடிவமைக்க அவர்களின் முக்கிய பங்களிப்பைப் புகழும் தடமாக உள்ளது.
“எல்லா புகழும் இறைவனுக்கே,” என அவர் ஆழ்ந்த நன்றி தெரிவித்தார். “எனக்கு கிடைத்த ஆசீர்வாதங்களுக்கும் வழிகாட்டுதலுக்கும் நன்றி. இந்த தருணத்தை நோக்கி என்னை அழைத்து வந்த அனைத்து
சந்தர்ப்பங்களுக்கும் நன்றி. இத்தகைய அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்கள் மற்றும் கல்வித் தலைவர்களுடன் இணைந்து நிற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததில் பெருமை அடைகிறேன் என ஆசிரியர் நிர்மலா கூறினார்.
“தேசிய பாலர் பள்ளி பாடத்திட்டத்தின் (National Standard Preschool Curriculum) அடிப்படையில் நான் கற்பிக்கிறேன்.
இந்த விருது, சிறுவர்களின் கல்வி மேம்பாட்டில் தன்னலமின்றி பாடுபடும் அனைவரின் ஒற்றுமையான முயற்சிக்கு கிடைத்த அங்கீகாரம் என அவர் மேலும் தெரிவித்தார்.