
லீமா (பெரு), நவ. 14 – பெரு நாட்டின் மிக உயரிய ஆர்டர் ஆஃப் சன் ஆஃப்
பெரு அல்லது “எல் சோல் டெல் பெரு“ எனும் விருது மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களுக்கு வழங்கி
கௌரவிக்கப்பட்டுள்ளது.
அரசு மாளிகையில் நடைபெற்ற நிகழ்வொன்றில்
இந்த விருதை பெரு அதிபர் டினா எர்சில்லா பொலுவார்டே ஸெகேரா
வழங்கினார்.
இந்த விருதைப் பெறுவதில் தாம் மிகவும் பெருமிதம் கொள்வதாக
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்.
கடந்த 1821ஆம் ஆண்டு ஸ்பெயின்
நாட்டிடமிருந்து சுதந்திரம் பெற்றப் பின்னர் அறிமுகப் படுத்தப்பட்ட மிக
உயரிய விருது இதுவென என்னிடம் தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்க
கண்டத்தின் மிக பழைமை வாய்ந்த பொது விருதாக இது கருதப்படுகிறது
என்று அவர் குறிப்பிட்டார்.
பிரதமராகப் பதவியேற்றப் பிறகு மற்ற அங்கீகாரங்களைப் போல் இந்த
விருதையும் நான் ஏற்றுக் கொண்டேன். மலேசிய மக்களின் சார்பாக இந்த
விருதை நான் பெறுகிறேன்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவின்
அடையாளமாக இந்த விருதை நான் பார்க்கிறேன் என்றார் அவர்.
இலகுவாக கருத முடியாத சில பழக்கவழக்கங்களை பெரு நாடு
கொண்டுள்ளது. மலேசியாவைப் போல் பல்லின மக்களையும்
கலாசாரத்தை அந்நாடு கொண்டிருப்பதோடு மலேசியாவுக்கு இணையான
பல்வகை சூழியல் முறையில் துரித வளர்ச்சியும் கண்டு வருகிறது என்று
அவர் சொன்னார்.
பெர்னாமா