
பாங்கி நவ 14-
தொடர் போராட்டத்தின் எதிரொலியாக பாங்கி தோட்டத்தைச் சேர்ந்த 17 முன்னாள் தொழிலாளர்களுக்கான வீடுகள் பட்டா கிடைத்துள்ளது.
செமினி நகரிலுள்ள பி.எஸ்.எம் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் பாங்கி தோட்ட பாட்டாளிகள் பெரும் மகிழ்ச்சியோடு பட்டாவை பெற்ற கொண்டனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14 இல் பாங்கி தோட்ட தொழிலாளர்களுக்கு புதிய வீடுகளுக்கான சாவி வழங்கப்பட்டதை தொடர்ந்து அவர்களது வீடுகளுக்கான நிலப்பட்டா இன்று வழங்கப்பட்டது.
நீண்ட நாட்கள் இழுபறியாக இருந்து வந்த வீடுகளுக்கான பட்டா விவகாரத்திற்கு இப்போது சுமுகமான தீர்வு காணப்பட்டுள்தாக பி.எஸ் எம் கட்சியின் துணைத்தலைவர் அருள்செல்வம் தெரிவித்தார்.
இந்நாட்டின் பழமையான தோட்டங்களில் ஒன்றாக பாங்கி தோட்டம் விளங்கி வந்தது.

கடந்த 2000 ஆம் ஆண்டில் இந்த தோட்டத்தின் செயல்பாடு ஒரு முடிவுக்கு வந்தது . அதனைத் தொடர்ந்து அந்த தோட்டத்தை சேர்ந்த 24 குடும்பத்தினர் மாற்று வீடுகளுக்கு போராடி வந்தனர். அந்த வேளையில் அந்த தோட்டத்திலிருந்து அவர்களை வெளியேற்றுவதற்கு பல்வேறு நெருக்கடிகள் வழங்கப்பட்டன
எனினும் பி.எஸ்.எம் கட்சியின் போராட்டத்தினால் அவர்களுக்கு தளவாடச் சாமன்கள் மற்றும் ஏர் கண்டிசனுடன் வீடுகள் பெற்றுத் தரப்பட்டதை அருள் செல்வன் தெரிவித்தார் .

பாங்கி தோட்ட குடியிருப்பாளர்களான கிருஷ்ணன் , ராஜன் ,மாதவன் மற்றும் முனியாண்டியும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்த வீடுகள் மொத்தம் 23 பேருக்கு வழங்கப்பட்டது. அவர்களில் ஆறு குடும்பங்களின் உரிமையாளர்கள் இறந்துவிட்டதை தொடர்ந்து வீடுகளுக்கான பட்டா அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அருள்செல்வம் தெரிவித்தார்.
தங்களுக்கு வீடுகளும் பட்டாவையும் பெற்று தந்த பி.எஸ்.எம். கட்சிக்கு பாங்கி தோட்ட பாட்டாளிகள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.