
வாஷிங்டன்: நவ 14 அமெரிக்க உளவுத்துறை இயக்குனராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துளசி கப்பார்ட்டை நியமனம் செய்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்கா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் தனது அரசில் பணியாற்றுபவர்களை தேர்வு செய்யும் பணியில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.
தேர்தலுக்கு முன்பாக, அளித்த வாக்குறுதியின்படி, தொழிலதிபர்கள் எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோர் அரசின் திறன் துறையின் தலைமை நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், அமெரிக்க உளவுத்துறை இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துளசி கப்பார்ட்டை நியமனம் செய்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராய்ட்டர்