சிபு,நவ 18: கடந்த ஜூன் மாதம் “டிண்டர்” செயலி மூலம் அறியப்பட்ட கொரிய ஆடவரின் காதல் மோசடியில் 30 வயதுடைய உள்ளூர் பெண் RM86,841 இழந்தார். சந்தேக நபரின் விசா விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்ட பிறகு, ஜூன் 19 அன்று தன்னை சந்திப்பதாக அச் சந்தேக நபர் உறுதியளித்ததாக தனியார் ஊழியரான பாதிக்கப்பட்டவர் தெரிவித்ததாக சிபு மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி சுல்கிப்லி சுஹைலி கூறினார்.
“கடந்த ஜூலை தொடக்கத்தில், சந்தேக நபர் பாதிக்கப்பட்டவருக்கு பல பொருட்களை டெலிவரி களை செய்ததாகவும், ஆனால் மலேசியா செல்வதற்கு முன்பு பொருட்கள் இந்தோனேசியா சுங்க துறையால் தடுத்து வைக்கப்பட்டதாகவும் சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.
ஜூலை 25 அன்று சுங்க அதிகாரியாகக் காட்டிக் கொண்ட ஒரு நபரைத் தொடர்பு கொண்ட பிறகு, பாதிக்கப்பட்டவர் அப்பொருட்களை பெற பணம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார்.
இதன் மூலம் குறிப்பிட்ட பொருட்களை மலேசியாவிற்கு அனுப்ப முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர் 86,841 ரிங்கிட் தொகையை 8 உள்ளூர் வங்கி கணக்குகளுக்கு 25 பணப் பரிமாற்றங்களைச் செய்துள்ளார்.
பிறகு, அப்பெண் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார் காரணம் அதன்பின் சந்தேக நபர் அவரை தொடர்பு கொள்ளவில்லை.
குற்றவியல் சட்டத்தின் 420ஆவது பிரிவின் கீழ் காவல்துறையினர் விசாரணை அறிக்கையை திறந்துள்ளனர்.
– பெர்னாமா