உரிமைக் கட்சியின் ஓராண்டு நிறைவு விழா!

எதிர்வரும் நவம்பர் 30 ஆம் திகதி கோலாலம்பூர் அருள் மிகு மாரியம்மன் ஆலயம் மண்டபத்தில்
நடக்கவிருக்கும் உரிமைக் கட்சியின் ஓராண்டு நிறைவு விழா ஒரு
மாபெரும் முன்னோக்கிய பாய்ச்சல் என்று உரிமைக் கட்சியின் துணைத் தலைவர் திரு டேவிட் மார்சல் (David Marshall) தெரிவித்தார்.

மலேசிய அரசியல் வரலாற்றில்
இந்திய கட்சிகள் நிறைய இருந்தும்
இன்றுவரை ஒரு அரசியல் கட்சிகள் கூட வெகுமக்களின் நம்பிக்கையை பெறாமலேயே இருக்கின்றது.

இந்திய சமுதாயதிக்கான திட்டங்கள் எதுவும் கொள்கை அளவில் இன்றுவரை வகுக்கப்படவில்லை என்பதே அதற்கு முக்கிய காரணம் என்று அவர் கூறினார்.

அந்த குறைபாட்டை முற்றிலும் நீக்கி , குரலற்ற சமுதாயத்தின் குரலாக இன்று உரிமைக் கட்சி செயல்பட்டு வருகிறது.

உழைத்து உழைத்து ஓடாய்த் தேய்ந்து போன இந்திய சமுதாயத்தின் உரிமைக்காக
உரிமை கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது என்று அவர் சொன்னார்.

மேலும் வரும் நவம்பர் 30 ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு கோலாலம்பூர் அருள் மிகு மாரியம்மன் ஆலயம் மண்டபத்தில் நடக்கவிருக்கும்
உரிமைக் கட்சியின் ஓராண்டு நிறைவு விழாவில் மக்கள் அணைவரும் திரளாக கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்று டேவிட் மார்சல் (David Marshall) கூறினார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles