வடகிழக்கு பருவமழையால் கிழக்கு கடற்கரையிலிருந்து மீன்களின் வரத்து குறையும்!

ஜார்ஜ் டவுன், நவ 21: வடகிழக்கு பருவமழை (எம்டிஎல்)காலத்தில் மீன்கள் கரைக்கு வருவது குறைவதால் கிழக்கு கடற்கரை மாநிலங்களில் மீன்களின் அளவு 10 சதவீதம் குறையும் என மீன்வளத்துறை எதிர்பார்க்கிறது.

இருப்பினும், அடுத்த ஆண்டு நவம்பர் முதல் மார்ச் வரையிலான வடகிழக்கு பருவமழை காலம் முழுவதும் மீன் விநியோகத்தின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய தனது தரப்பு ஆரம்ப மற்றும் செயலூக்கமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என மீன்வளத்துறை இயக்குநர் ஜெனரல் டத்தோ அட்னான் ஹுசைன் கூறினார்.

“உண்மையில் மீன்கள் குறைப்பு இருக்கும் என்பதை நாங்கள் மறுக்கவில்லை.

ஆனால் அது தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையை உள்ளடக்கியது.

அதே நேரத்தில் பினாங்கு, கெடா, பேராக், பெர்லிஸ் போன்ற மேற்கு கடற்கரையில் மீன்பிடி நடவடிக்கைகள் வழக்கம் போல் மேற்கொள்ளலாம்.

மீன்களின் சில்லறை விலையில் சிறிதளவு அதிகரிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப் பட்டாலும், வடகிழக்கு பருவமழை காலம் முழுவதும் மீன் வழங்கல் போதுமானதாக இருக்கும் என்று அவரது தரப்பு உத்தரவாதம் அளிப்பதாகவும், அதை உறுதிப்படுத்த தனது தரப்பும் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அட்னான் கூறினார்.

அதுமட்டுமல்லாமல், மழைக்காலம் முழுவதும் மீன்களின் அளவு எப்போதும் போதுமானதாக இருப்பதை உறுதிசெய்யும் வகையில், உறைந்த மீன்களை சேமிப்பதற்கான ஆயத்தங்களையும் தனது தரப்பு மேற்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

சிலாங்கூர் கினி

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles