![](https://thinathanthi.my/wp-content/uploads/2024/11/WhatsApp-Image-2024-11-21-at-13.59-1024x512.jpg)
டோமினிக்கா, நவ 21-
டொமினிகா அரசால் வழங்கப்பட்ட உயரிய விருதை 140 கோடி இந்தியர்களுக்காகஅர்ப்பணிக்கிறேன்’ என பிரதமர் மோடி சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில், டொமினிகாவுக்கு 70,000 டோஸ் ஆஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசியை பிரதமர் நரேந்திர மோடி வழங்கி உதவினார்.
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், இந்தியா – டொமினிகா நல்லுறவை வலுப்படுத்த மோடி எடுத்து வரும் முயற்சியை அங்கீகரிக்கும் விதமாகவும், நாட்டின் மிக உயரிய தேசிய விருதான டொமினிகா கெளரவ விருது, இந்திய பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தனது 3 நாடுகளுக்கான பயணத்தின் இறுதி கட்டமாக, கயானாவிற்கு பிரதமர் மோடி சென்றார்.
அங்கு நடந்து உச்சிமாநாட்டின் போது, டொமினிகாவின் அதிபர் சில்வானி பர்ட்டனா, பிரதமர் மோடிக்கு உயரிய தேசிய விருதான டொமினிகா கெளரவ விருது வழங்கினார்.