
அரசியலில் மாற்றம் வராதா என எதிர்பார்த்த இந்திய இளைஞர்களின் நம்பிக்கையாக உரிமைக் கட்சி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்று அக்கட்சியின் இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் திரு.மார்கஸ் ராஜ் தெரிவித்தார்.
அரசியல் ஒரு சாக்கடை என கருதிய இளைஞர்களும், இன்று உரிமைக் கட்சியில் இணைந்து சமுதாய சேவையை செய்து கொண்டு இருக்கின்றனர். அரசியல் மாற்றதிக்கான சிந்தனையை தொடர்ச்சியாக விதைத்து இன்று மாபெரும் ஒரு இளைஞர் கூட்டம் உருமைக் கட்சியில் உருவாகி இருக்கிறது என்று அவர் சொன்னார்.
அதற்கு சான்று ஜோகூர் குளுவாங்கில் இளைஞர் படையை உருவாக்கி , அங்குள்ள இந்தியர்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருவது
மட்டுமில்லாமல், அந்த பிரச்சினைகள் இப்பொழுது தீர்வை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது என்பதை அவர் சுட்டி காட்டினார்.
தேசிய நீரோட்டத்தில் இருந்து இந்தியர்கள் ஓரங்கட்டப்பட்டிருப்பதும் ஒதுக்கப்பட்டிருப்பதும் இன்றைய அரசியலில் தெள்ள தெளிவாக தெரிகிறது.
இந்த 67ஆண்டுகள் ஜனநாயக ஆட்சியில் நாம் சாதித்தது என்ன என்று கேட்டால், ஒன்றும் இல்லை என்றுதான் சொல்ல முடியும்.
இதற்கெல்லாம் ஒரே வழி , அடுத்த தலைமுறையின் நம்பிக்கை என சொல்லப்படும் இளைஞர்கள் அரசியலில் ஈடுபட்டால் மட்டுமே நம் சமுதாயதின் பிரச்சனைகளை நாம் தீர்க்க முடியும் என அவர் கூறினார்.
வரும் நவம்பர் 30 ஆம் திகதி கோலாலம்பூர் அருள் மிகு மாரியம்மன் ஆலயம் மண்டபத்தில்
நடக்கவிருக்கும் உரிமைக் கட்சியின் ஓராண்டு நிறைவு விழாவில் அதிகமான இளைஞர்கள் பங்கேற்பார்கள் என்று அவர் உறுதியளித்தார்.