வயல் நாடு, நவ 23-
முதல் முறையாக நாடாளுமன்ற தேர்தலில் களம் காணும் பிரியங்கா, வயநாடு லோக்சபா இடைத்தேர்தலில் தன்னை எதிர்த்து களமிறங்கியுள்ள இடதுசாரி கூட்டணி மற்றும் பா.ஜ., வேட்பாளர்கள் நெருங்க முடியாத வகையில், 1 லட்சத்து 21,476 ஓட்டுகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு நிகரான எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தொகுதி வயநாடு.
அண்மையில் முடிந்த லோக்சபா தேர்தலில் 2 தொகுதிகளில் களம் கண்ட ராகுல் காந்தி அவற்றில் ஒன்றான வயநாடு தொகுதி எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார்.
அந்த தொகுதி இடைத்தேர்தலில் ராகுலின் சகோதரியும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா போட்டியிட்டார்.
வயநாட்டுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலுடன் சேர்த்து ஓட்டுப்பதிவு நடைபெற்றது.
அதன் முடிவுகள் இன்று எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டது.
முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன.
அதனை தொடர்ந்து மின்னணு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி தொடங்கியது
முதலே பிரியங்கா முன்னிலையில் இருந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ., வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ், இடதுசாரி கூட்டணி சார்பில் இந்திய கம்யூ.வேட்பாளர் சத்யன் மொகேரி ஆகியோர் ஆரம்பம் தொட்டே பின்னடைவில் உள்ளனர்.
வயல் நாடு நாடாளுமன்ற தொகுதியில் பிரியங்கா அமோக வெற்றி பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.