பொங்கலுக்கு கலக்க வருகிறது அஜித்தின் குட் பேட் அக்லி

சென்னை: நவ 27-
தற்போது ஒரே நேரத்தில் 2 தமிழ்ப் படங்களில் மாறி மாறி நடித்து வருகிறார் அஜித் குமார்.

மகிழ் திருமேனி இயக்கும் ‘விடாமுயற்சி’ படத்திலும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ என்ற படத்திலும் நடிக்கும் அவரது ஜோடியாக திரிஷா நடிக்கிறார்.

‘குட் பேட் அக்லி’ படம், வரும் பொங்கலன்று திரைக்கு கலக்க வருகிறது.

இதில் முக்கிய வேடங்களில் பிரபு, பிரசன்னா, சுனில், அர்ஜூன் தாஸ், ராகுல் தேவ், யோகி பாபு நடித்து வருகின்றனர்.

இசை அமைக்க ஒப்பந்தமான தேவிஸ்ரீ பிரசாத் திடீரென்று விலகியதாக கூறப்படுகிறது. எனவே, வேறொருவர் இசை அமைக்கிறார்.

இந்தப் படங்களை தொடர்ந்து ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நடிப்பு தவிர்த்து கார் ரேஸ் மற்றும் பைக் ரேஸில் அதிக ஆர்வத்துடன் ஈடுபட்டு வரும் அஜித் குமார், விரைவில் கார் பந்தயத்தில் பங்கேற்க இருப்பதாக, இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் சம்மேளனம் அறிவித்து இருந்தது.

இந்நிலையில், இன்று நவம்பர் 27ஆம் தேதி முதல் அஜித் குமாரின் ரேஸிங் அணி தீவிர பயிற்சியை தொடங்க இருக்கிறது என்று, அவரது வீனஸ் மோட்டார்சைக்கிள் டூர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles