ஊத்தான் மெலிந்தாங் , சிம்பாங் அம்பாட் நில வழக்கு! இழப்பீடு மனுவை தாக்கல் செய்ய இரண்டு மாதகால அவகாசம்

ஊத்தான் மெலிந்தாங் சிம்பாங் அம்பாட் நில தொடர்புடைய பங்குதாரர்களுக்கு அதன் இழப்பீட்டுக்கான விவரங்களை தாக்கல் ( மனுவை) தாக்கல் செய்ய பங்குதார்களின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் டி. பி. விஜேந்திரன் இரண்டு மாத கால அவகாசத்தை முன் வைத்த கோரிக்கையை ஈப்போ உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

இன்று ( 27-11-24) இங்குள்ள உயர் நீதிமன்றத்தில் நீதிபதி டத்தோ பூபிந்தர் சிங் முன்னிலையில் மீண்டும் தொடங்கியது.கடந்த 30 ஆண்டுகால போராட்டத்திற்கு தீரவுப் பிறக்கும் நிலையில் இந்த வழக்கு உள்ளது.

இந்த நிலத் திட்டத்தில் முதலீடு செய்த பங்குதாரர்களில் பதிவு செய்யப்பட்ட 217 நபர்களுக்கு இழப்பீடு பெறுவதற்கான முனுவை தாக்கல் செய்ய வழக்கறிஞர் டி. பி. விஜேந்திரன் விண்ணப்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

கடந்த 2014 ஆம் ஆண்டு பெடரல் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கின் தீர்ப்பில் 217 பங்குதாரர்களுக்கு இழப்பீடு வழங்க தீர்ப்பு வழங்கப்பட்டது.அது தொடர்பான வழக்கு ஈப்போ உயர் நீதிமன்றத்தில் மாற்றம் செய்யப்பட்டது.

இது தொடர்பாக இன்று வழக்கு தொடங்கிய போது இழப்பீடு வழங்குவது குறித்து மனுவை தாக்கல் செய்ய நீதிபதி டத்தோ பூபிந்தர் சிங் விளக்கம் கேட்டபோது, இரண்டு மாத அவகாசத்தை வழக்கறிஞர் டி.பி. விஜேந்திரன் கோரினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles