
தஞ்சோங் துவாலாங், நவ 27
தஞ்சோங் துவாலாங் காவல்
நிலையத்தின் தலைவர் சார்ஜென்ட் மேஜர் ஜைதின் அப்துல் ரஷீத் அவர்களிடம் 40 நாற்காலிகள் மற்றும் 4 மேஜைகளை மாலிம் நாவார் சட்டமன்ற உறுப்பினர் பவானி ஷாஷா வழங்கினார்.
தஞ்சோங் துவாலாங் காவல் நிலையத்திற்கு வருபவர்களின் பயன்பாட்டிற்காக இதை வழங்கியுள்ளதாக அவர் கூறினார்.
தஞ்சோங் துவாலாங் காவல் நிலையம் கடந்த 2015 இல் நிறுவப்பட்டது.
தஞ்சோங் துவாலாங் சுற்றியுள்ள 18,000 குடியிருப்பாளர்களின் பாதுகாப்பைக் கவனிக்கும் மொத்தம் 20 அதிகாரிகள் இங்கு பணியில் உள்ளனர்.
நான் ஒரு மக்கள் பிரதிநிதியாக Tg Tualang காவல் நிலையத்தில் உள்ள PDRM அதிகாரிகளுடன் அரசு ஊழியர்களாக, நாங்கள் தொடர்ந்து சேவை செய்வோம் என்று ஷாஷா சொன்னார்.
எங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற உறுதிபூண்டுள்ளோம்.
மேலும் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு எப்போதும் பராமரிக்கப்பட்டு மேம்படுத்தப்படுவதை உறுதிபடுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தஞ்சோங் துவலாங் காவல் நிலைய தலைவர் எஸ்.எம் சைடின் அப்துல் ரசாக், பெங்கூலூ முகிம் தஞ்சோங் துவலாங் முக்தார், தஞ்சோங் துவலாங் கிராமத் தலைவர் சோங் யோக் பெங் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.