புதுடில்லி நவ 28- முதன் முறையாக லோக்சபா தேர்தலில் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரியங்கா , இன்று பாராளுமன்றத்தில் எம்.பி.யாக பதவியேற்கிறார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் கேரள வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராகுல், உபி.யில் ரேபரேலியிலும் போட்டியிட்டதால், அத்தொகுதியில் வெற்றிபெற்றார்.
இதையடுத்து வயநாடு எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.
அந்தத் தொகுதிக்கு சமீபத்தில் நடந்த இடைத் தேர்தலில், அவரது தங்கை பிரியங்கா போட்டியிட்டார்.
முதன்முறையாக போட்டியிட்டு 6,22,338 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்று எம்.பி.யானார்.
இன்று தன் அண்ணன் ராகுலுடன் பாராளுமன்றம் வந்து முறைப்படி எம்.பி.யாக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.