ஐபிஎல் ஏலம்! வீரர்கள் தேர்வில்வித்தியாசம் காட்டிய சிஎஸ்கே!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பாணி ஐபிஎல் தொடரில் எப்போதுமே வித்தியாசமாக இருக்கும்.

தோனி கேப்டனாக இருந்தவரை, சாதாரண வீரரை அணிக்குள் கொண்டு வந்துகூட அவரை துருப்புச் சீட்டாக மாற்றிவிடுவார்.

மற்ற அணிகள் பந்துவீச்சாளர்கள் மீது கவனம் செலுத்தும் போது பேட்டர்கள் மீது சிஎஸ்கே கவனம் செலுத்தும்.

மற்ற அணிகள் பேட்டர்கள் மீது கவனம் செலுத்தும்போது ஆல்ரவுண்டர்களை சிஎஸ்கே அள்ளிவிடும்.

வெளிநாட்டு வீரர்களை வாங்கும் போது, உள்நாட்டு வீரர்களை தேர்ந்தெடுத்து சிஎஸ்கே வாங்கும். இதுபோன்ற வித்தியாசமான அனுகுமுறையுடன்தான் சிஎஸ்கே அணி ஏலத்தில் பங்கேற்கும்.

அந்த வகையில் 2025-ஆம் ஆண்டு ஐபிஎல் டி20 சீசனுக்கான மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி கடைபிடித்த அணுகுமுறை என்ன?

சிஎஸ்கே அணி வாங்கிய வீரர்கள் என்பது குறித்து பார்க்கலாம்.

ஐபிஎல் ஏலம் தொடங்கிய போது சிஎஸ்கே அணி 5 வீரர்களைத் தக்க வைத்திருந்தது.

கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, மதீஷ பத்திரண, எம்.எஸ்.தோனி ஆகிய 5 வீரர்களை தக்கவைத்தது.

அதற்கான தொகை போக சிஎஸ்கே அணியிடம் ஏலம் தொடங்கும் போது ரூ.55 கோடி கையிருப்பு இருந்தது.

வெளிநாட்டு வீரர்கள் யார்?
இந்த ஏலத்தில் சிஎஸ்கே அணி 20 வீரர்களை விலைக்கு வாங்கியது.

இதில் வெளிநாட்டு வீரர்களான டேவான் கான்வே(ரூ.6.25 கோடி), ரச்சின் ரவீந்திரா(ரூ.4 கோடி), நூர் அகமது(ரூ.10 கோடி), சாம் கரண்(ரூ.2.40கோடி), நாதன் எல்லிஸ்(ரூ.2 கோடி) ஜேமி ஓவர்டன்(ரூ.1.50கோடி) ஆகியோரையும் சிஎஸ்கே வாங்கியுள்ளது.

உள்நாட்டு வீரர்கள் யார்?

14 உள்நாட்டு வீரர்களை சிஎஸ்கே அணி வாங்கியது. இதில் ரவிச்சந்திரன் அஸ்வின்(ரூ.9.75 கோடி), ராகுல் திரிபாதி(ரூ.3.40 கோடி), கலீல் அகமது(ரூ.4.80 கோடி), விஜய் சங்கர் (ரூ.1.20 கோடி), அன்சுல் கம்போஜ் (ரூ.3.40 கோடி) தீபக் ஹூடா(ரூ.1.70கோடி), ஆன்ட்ரே சித்தார்த்(ரூ.30 லட்சம்), வன்ஸ் பேடி(ரூ.55 லட்சம்), ஸ்ரேயாஸ் கோபால்(ரூ.30 லட்சம்), ராமகிருஷ்ணா கோஷ்(ரூ.30 லட்சம்), கமலேஷ் நாகர்கோட்டி(ரூ.30 லட்சம்), குர்ஜப்நீத் சிங் (ரூ.2.20 கோடி), முகேஷ் சவுத்ரி(ரூ.30லட்சம்), ஷேக் ரசீத்(ரூ.30 லட்சம்) ஆகியோர் அடங்குவர்.

சுழற்பந்துவீச்சுக்கு முக்கியத்துவம்
சிஎஸ்கே அணி இந்த முறை ஐபிஎல் ஏலத்தில் தரமான சுழற்பந்துவீச்சாளர்கள் மீது கவனம் செலுத்தியுள்ளது.

முந்தைய சீசன்களில் ஜடேஜா, சான்ட்னர், தீக்சனா ஆகியோர் மட்டுமே சுழற்பந்துவீச்சாளர்களாக சிஎஸ்கே அணியில் இருந்தனர்.

ஆனால், இந்த முறை சுழற்பந்துவீச்சுப் படையை வலுவாக கட்டமைக்கும் வகையில் வீரர்கள் தேர்வில் முக்கியத்துவம் அளித்தது. ரவீந்திர ஜடேஜா இருக்கும் நிலையில் ஆஃப்-ஸ்பின்னர் ரவிச்சந்திர அஸ்வினை வாங்கியுள்ளது.

2015 ஆம் ஆண்டுக்குப்பின் அஸ்வின் மீண்டும் சிஎஸ்கே அணிக்குள் திரும்பி உள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles