
கோலாலம்பூர், நவ. 29-
அரசாங்க நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்பு படைகளின் பயன்பாட்டிற்காக ஹெலிகாப்டர்களைப் பெறுவதில் அரசாங்கம் குத்தகைய முறையைப் பயன்படுத்துகிறது. இந்த முறை வெளிப்படையானதாகவும் நாட்டிற்கு நிதிச்சுமை அளிக்காத வகையிலும் உள்ளது.
பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பணிகளுக்கு செலவிடுவதை இந்த குத்தகை திட்டத்தின் மூலம் மிச்சப்படுத்த முடிவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
நாம் மலிவான விலையில் ஹெலிகாப்டர்களை வாங்கினாலும் அவற்றை பராமரிப்பதற்கு ஹெலிகாப்டர்களை வாங்கிய தொகையைக் காட்டிலும் அதிகம் செலவிட வேண்டியுள்ளதாக அவர் சொன்னார்.
மக்களவையில் கேள்வி நேரத்தின் போது பிரதமர் இத்தகவலை வெளியிட்டார்.
குத்தகை முறையில் மேற்கொள்ளப்படும் மலேசிய ஆயதப் படைக்கான ஹெலிகாப்டர் வாடகைத் திட்டம் தொடர்பில் தானா மேரா தொகுதி பெரிக்கத்தான் நேஷனல் உறுப்பினர் டத்தோஸ்ரீ இக்மால் ஹஷிம் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
பெர்னாமா