கோடீஸ்வரர் டான்ஶ்ரீ ஆனந்த கிருஷ்ணன் மறைவு: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இரங்கல்!

கோலாலம்பூர்: நவ 29- மலேசியாவின் முன்னணி கோடீஸ்வரரும் பிரபல தொழிலதிபருமான டான்ஶ்ரீ ஆனந்த கிருஷ்ணன் மறைவையொட்டி பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

கார்ப்பரெட் வர்த்தக உலகிற்கும் ஊடகத்துறைக்கும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் டான்ஶ்ரீ ஆனந்த கிருஷ்ணன் ஆற்றிய பங்குகள் யாவும் என்றும் நினைவில் கொள்ளப்படும் என்று அவர் தமது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் .

இவ்வேளையில் அவரை இழந்து வாடும் அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்வதாக அவர் சொன்னார்

டான்ஶ்ரீ ஆனந்த கிருஷ்ணன் வயது மூப்பு காரணமாக தனது 86ஆவது வயதில் நேற்று காலமானார் என்று USAHA TEGAS உறுதிப்படுத்தியது

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வணிகவியல் கல்வி பயின்ற டான்ஶ்ரீ ஆனந்த கிருஷ்ணன் MAXIS COMMUNICATION, MEASAT- ASTRO நிறுவனங்களை நிறுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles