
கோலாலம்பூர், நவ. 29 – தொடர் மழையால் நாட்டின் பல மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அபரிமிதமாக அதிகரித்துள்ளது
இன்று காலை நிலவரப்படி கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 59,232 பேர் 221 தற்காலிக நிவாரண மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளனர். நேற்றிரவு 207 நிவாரண மையங்களில் 50,947 பேர் மட்டுமே மட்டுமே தங்கியிருந்தனர்.
திரங்கானுவில் இன்று காலை 8 மணி நிலவரப்படி 5,916 குடும்பங்களைச் சேர்ந்த 20,911 பேர் 232 துயர் துடைப்பு மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர். நேற்று இரவு 8 மணி அளவில் இந்த எண்ணிக்கை 17,762 பேராக இருந்தது.
கெடாவில், நேற்று இரவு 717 குடும்பங்களைச் சேர்ந்த 2,210 பேராக இருந்த வெள்ள அகதிகள் எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி 1,432 குடும்பங்களைச் சேர்ந்த 4,378 பேராக உயர்வு கண்டுள்ளது.
bernama