வெள்ள நிலைமை மோசமடைந்தால் அரச மலேசிய ராணுவ படை களமிறங்கும் என்று ராணுவ தளபதி ஜெனரல் டான்ஶ்ரீ முஹம்மத் ஹஃபிசுடின் கூறினார்.
ஓப்ஸ் மூர்னியின் கீழ் சுமார் 192 அதிகாரிகளுடன் இணைந்து 3552 ராணுவ வீரர்கள் வெள்ள உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
TDMக்கு சொந்தமான தளவாட பொருட்கள் யாவும் இந்த திட்டத்தின் கீழ் பயன்படுத்தம் என்று அவர் தெரிவித்தார்.
தற்போதுள்ள வெள்ளப்பேரிடர் நாடு முழுவதும் ஆண்டிறுதி வரை தொடரும் என்றும் வெள்ள நிலைமை மோசமடைந்தால் ராணுவ வீரர்கள் களமிறக்கப்படுவார்கள் என்று அவர் சொன்னார்