புத்ராஜெயா, நவ 30-:
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள பேரழிவைத் தொடர்ந்து அனைத்து அமைச்சரவை உறுப்பினர்களின் விடுமுறைகளும் முடக்கப்பட்டுள்ளன.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த விஷயத்தை அறிவிக்கும் போது அனைத்து அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்களும் பேரிடர் பகுதிக்கு செல்ல உத்தரவிடப்பட்டதாக கூறினார்.
“அனைத்து அமைச்சர்களும் இப்போது தங்கள் பணிகளைத் தொடருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
களத்திற்கு செல்லுங்கள். ஆம் விடுமுறை முடக்கப்பட்டுள்ளது” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
நாட்டில் வெள்ளப் பேரிடர்கள் ஏற்பட்டுள்ள நிலையில் அமைச்சரவை உறுப்பினர்களின் விடுமுறை முடக்கப்படுமா என வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ச்சியான மழையால் பல மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அதில் கிளந்தான் அதிகபட்ச எண்ணிக்கை பதிவு செய்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, அங்கு மொத்தம் 59,232 பாதிக்கப்பட்டவர்கள் 221 தற்காலிக தங்கும் மையங்களில் (பிபிஎஸ்) தஞ்சம் அடைந்துள்ளனர்.
பெர்னாமா