கோலாலம்பூர், நவ 30-
பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் போதுமானதாக இருப்பதை உறுதி செய்வதற்காக பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் (KPWKM) RM39.9 மில்லியன் வழங்குகிறது
அதில் RM12 மில்லியன் பெடரல் மட்டத்திலும், RM 27.9 மில்லியன் மாநில அளவிலான டிப்போக்களுக்கு தொடர்புடைய தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் என்று அதன் துணை அமைச்சர் டத்தோஸ்ரீ நோரைனி அஹ்மட் கூறினார்.
“கூடாரங்கள், பாய்கள் மற்றும் போர்வைகள் போன்ற அடிப்படைத் தேவைகளை நாங்கள் வழங்குகிறோம்.
அதே நேரத்தில் நாங்கள் உணவுப் பொட்டலங்கள், சமைத்த உணவுகள் அல்லது உணவு பைகளைத் தயார் செய்கிறோம்.
“நாங்கள் குறிப்பாக மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்கள், பெண்கள், குழந்தைகளுக்கு இந்த உதவிகளை ஏற்பாடு செய்கிறோம்.
இது குறிப்பாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் வழங்கப்பட வேண்டும், ”என்று அவர் கூறினார்.
நாட்டில் பேரிடர் நிவாரணப் பணிகளில் ஈடுபடும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது குறித்து JKM கொள்கை அறிக்கையை தயாரித்து வருவதாக நோரைனி மேலும் கூறினார்.
– பெர்னாமா