ஷா ஆலம், நவ. 30-
வரும் டிசம்பர் மாதம் 2ஆம் தேதி தொடங்கி
அடுத்தாண்டு பிப்ரவரி 6ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் எஸ்.பி.எம்.
தேர்வில் அமரவிருக்கும் மாணவர்களுக்கு சிலாங்கூர் மாநில மனித வளம் மற்றும் வறுமை
ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பராய்டு
வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் முக்கியப் பங்கினை
வகிக்கும் இந்த தேர்வை மிகவும் கவனமுடன் எழுதி சிறப்பான அடைவு
நிலையை பதிவு செய்ய தாம் வாழ்த்துவதாக அவர் தெரிவித்தார்.
எஸ்.பி.எம். தேர்வில் கிடைக்கும் சான்றிதழின் அடிப்படையில்தான்
மாணவர்களின் அடுத்தக் கட்ட நகர்வு அமையும் என்பதால் மாணவர்கள்
மிகுந்த கவனத்துடன் தேர்வை எதிர் கொள்ள வேண்டும் என அவர்
கேட்டுக் கொண்டார்.
தேர்வை எதிர்கொள்வதில் அதிகப் பதட்டம் கொள்ள வேண்டாம்.
இலகுவாக எடுத்துக் கொள்ளுங்கள்.
அதேசமயம் தேர்வு காலத்தில்
உடலாரோக்கியம் மீது கவனம் செலுத்துவதோடு நேர
மேலாண்மையையும் முறையாகக் கடைபிடியுங்கள் என அவர்
மாணவர்களுக்கு ஆலோசனை கூறினார்.
தற்போது மழை காலமாக உள்ளதால் தேர்வின் போது உரிய நேரத்தில்
பள்ளியில் இருப்பதை மாணவர்கள் உறுதி செய்ய வேண்டும். தேர்வில்
சிறப்பான அடைவு நிலையைப் பதிவு செய்ய தேர்வு எழுதும் அனைத்து
மாணவர்களுக்கும் தாம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று
அவர் குறிப்பிட்டார்.